தொழிற்சங்க நிர்வாகிகள்இ.பி.எஸ்.,சிடம் வாழ்த்து
தொழிற்சங்க நிர்வாகிகள்இ.பி.எஸ்.,சிடம் வாழ்த்துஓமலுார் ஓமலுார் அருகே உள்ள, அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அக்கட்சி பொதுச்செயலர், இ.பி.எஸ்., தலைமையில் நேற்று நடந்தது. அதில் வரும் சட்டசபை தேர்தல் பணி முன்னேற்பாடு, பூத் கமிட்டி உள்ளிட்ட பல்வேறு கட்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. முன்னதாக, என்.எல்.சி., அண்ணா தொழிற்சங்க ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்தலில், தலைவராக பாரதிதாசன், செயலராக வெற்றிவேல், பொருளாளராக அமுல்ராஜ், அலுவலக செயலராக ஜாகீர் உசேன் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல் சுரங்கம், 1, 2 போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த நிர்வாகிகள், இ.பி.எஸ்.,சிடம் வாழ்த்து பெற்றனர்.