உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மனைவி மாயம் கொத்தனார் புகார்

மனைவி மாயம் கொத்தனார் புகார்

மனைவி மாயம் கொத்தனார் புகார்தாரமங்கலம்:தாரமங்கலம் அருகே செவந்தானுாரை சேர்ந்த, கொத்தனார் சித்தையன், 32. இவருக்கு மனைவி சவுந்தர்யா, 23, மகன் உள்ளனர். இரு நாட்களுக்கு முன் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் சித்தையன் வேலைக்கு சென்றார். மதியம் சவுந்தர்யா, சித்தையனுக்கு போன் செய்து, 'நான் வீட்டுக்கு வரமாட்டேன். தேட வேண்டாம். மகனை பள்ளியில் இருந்து அழைத்துச்செல்லுங்கள்' என கூறி, போனை துண்டித்து, அணைத்து வைத்து விட்டார். எங்கு தேடியும் சவுந்தர்யாவை காணவில்லை. இதனால் சித்தையன் நேற்று அளித்த புகார்படி, தாரமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை