உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு பேரணி

மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு பேரணி

மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு பேரணிகெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தெடாவூர் டவுன் பஞ்சாயத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில், பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் மஞ்சப்பை பயன்படுத்தக்கோரி விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது. பேரணியை, ஆத்துார் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அன்புசெழியன் தொடங்கி வைத்தார். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் பயன்படுத்துவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்; மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என, கோஷம் எழுப்பியபடி சென்றனர். டவுன் பஞ்சாயத்து தலைவர் வேல், செயல் அலுவலர் யவனராணி, துாய்மை பணியாளர்கள், மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை