மேலும் செய்திகள்
குப்பை கொட்ட எதிர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
01-Feb-2025
குப்பை அள்ளாததை கண்டித்துபா.ம.க.,வினர் தர்ணாஇடைப்பாடி, : அரசிராமணி டவுன் பஞ்சாயத்தில் சேகரிக்கப்படும் குப்பையை கொட்ட, அரசு சார்பில், குறுக்குப்பாறையூரில், 2 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அங்கு குப்பை கொட்ட, அப்பகுதி விவசாயிகள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், 25 நாட்களாக குப்பை சேகரிக்கப்படாமல், 15 வார்டுகளிலும் ஆங்காங்கே குப்பை கொட்டப்பட்டு தேங்கியுள்ளது.இதனால், குப்பை அகற்றாத, டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து, அதன் அலுவலகம் முன், பா.ம.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. டவுன் பஞ்சாயத்து செயலர் சேட்டு தலைமை வகித்தார். தொடர்ந்து அதிகாரிகள் வந்து பதில் அளிக்கக்கோரி, அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். செயல் அலுவலர் இல்லாததால், எழுத்தர் சிந்துஜா வந்து பேச்சு நடத்தி, ஒரு வாரத்தில் குப்பை அகற்றப்படும் என உறுதி அளித்தார். இதனால், ஒரு மணி நேர தர்ணாவை கைவிட்டனர்.
01-Feb-2025