ஜிவி மேல்நிலைப்பள்ளியில்பெற்றோர் போற்றுதும் நிகழ்வு
'ஜிவி' மேல்நிலைப்பள்ளியில்'பெற்றோர் போற்றுதும்' நிகழ்வுமேட்டூர்:மேட்டூர், மாசிலாபாளையம், 'ஜிவி' மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள், அவர்களது பெற்றோர் பங்கேற்ற, 'பெற்றோர் போற்றுதும்' நிகழ்வு நடந்தது. பள்ளி அறக்கட்டளை தலைவர், இயக்குனர் பிச்சமுத்து, மாணவர்கள் தேர்வு சிறப்பாக எழுத வேண்டி சிறப்பு பூஜை, பெற்றோர் ஆசி அவசியம் குறித்து பேசினார். தாளாளர் அன்பழகன், மாணவர்களின் கல்விக்கு உதவியாக இருக்க வேண்டிவை குறித்து, பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவியர், அவர்களது பெற்றோருக்கு பாத பூஜை செய்து ஆசி பெற்றனர். பள்ளி அறக்கட்டளை செயலர் அமல்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.