மேலும் செய்திகள்
கைலாசநாதர் கோவிலில் களைகட்டிய தேரோட்டம்
13-Feb-2025
இறுதி நாளும் தேரோட்டம் கோலாகலம்தாரமங்கலம்:தைப்பூசத்தையொட்டி தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், 3 நாள் தேரோட்டம், கடந்த, 11ல் தொடங்கியது. 3ம் நாளான நேற்று, பஸ் ஸ்டாண்டில் நிலை நிறுத்தப்பட்டிருந்த இரு தேர்களையும், ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்து இழுத்தனர்.குறிப்பாக காலையில் சோமாஸ்கந்தர், உமாமகேஸ்வரி, வரதராஜ பெருமாள் இருந்த தேர்களை இழுத்துச்சென்று, தெற்கு ரத வீதியில் நிலைநிறுத்தினர். தொடர்ந்து மாலையில் மீண்டும் வடம் பிடித்து, தேர் நிலையத்தில் நிலைநிறுத்தினர். தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள், 'அரோகரா' கோஷம் எழுப்பி தரிசித்தனர். மேலும், 3 நாட்கள் தேரில் வலம் வந்த சுவாமிக்கு, தேர் நிலையத்தில் சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டு, கோவிலுக்கு அழைத்து வந்தனர். செயல் அலுவலர் புனிதராஜ், ஓமலுார் தாசில்தார் ரவிக்குமார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் தலைமையில் போலீசார், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 16ல் தெப்ப உற்சவம், 17ல் மஞ்சள் நீராட்டு விழா, தீர்த்தவாரி உற்சவம் நடக்க உள்ளது.
13-Feb-2025