மேலும் செய்திகள்
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
21-Jan-2025
அழகுராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்இடைப்பாடி:கொங்கணாபுரம் அருகே உள்ள அழகுராய பெருமாள் கோவில் வளாகத்தில் விநாயகர், கருடாழ்வார், ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஏராளமான தெய்வங்கள் உள்ளன. அதில் பெருமாள் கோவிலுக்கு புதிதாக 2 நிலை கோபுரம் அமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. 4 கால யாக சாலை பூஜை, கடந்த, 17ல் தொடங்கியது. தொடர்ந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. யாகசாலை பூஜை நிறைவடைந்து, காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட நீர், கோபுர கலசங்கள் மீது ஊற்றி நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. பின் அந்த புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
21-Jan-2025