உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓங்காளியம்மன் கோவிலில்தீ மிதித்த பக்தர்கள்

ஓங்காளியம்மன் கோவிலில்தீ மிதித்த பக்தர்கள்

ஓங்காளியம்மன் கோவிலில்தீ மிதித்த பக்தர்கள்இடைப்பாடி:இடைப்பாடி அருகே அரசிராமணி செட்டிப்பட்டியில் சரபங்கா நதிக்கரையோரம் உள்ள ஓங்காளியம்மன் கோவில் மாசி திருவிழா, 15 நாட்களுக்கு முன் தொடங்கி நடந்து வருகிறது. அதில் நேற்று ஏராளமான பக்தர்கள், கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரைக்கு சென்று புனித நீராடினர். அங்கிருந்து அம்மன் திருவீதி உலா புறப்பட்டது.அதில் பக்தர்களும் வந்து, கோவிலை அடைந்தனர். பின் எலுமிச்சை அலகு குத்தியும், கையில் குழந்தைகளை துாக்கியபடியும் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் மாவிளக்கு தட்டு எடுத்து பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை