அடிப்படை வசதி கேட்டுகண்டன ஆர்ப்பாட்டம்
அடிப்படை வசதி கேட்டுகண்டன ஆர்ப்பாட்டம்சேலம்:-சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டல அலுவலகம் முன், அம்மாபேட்டை மண்டல சி.பி.ஐ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மண்டல செயலர் ஷநவாஸ்கான் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் மோகன், கோரிக்கைகள் குறித்து பேசினார். அதில், 43வது வார்டு கடம்பூர் முனியப்பன் கோவில் தெருவில் குடிநீர் வசதிக்கு இணைப்புகள் வழங்கி பிரச்னையை சரிசெய்ய வேண்டும். பாதாள சாக்கடை கழிவுநீர் செல்ல வசதியை ஏற்படுத்த வேண்டும்; தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து தர வலியுறுத்தினர். மாவட்ட துணை செயலர்கள் கந்தன், சீனிவாசன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் பரமசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.