தொழிலாளர் போராட்டம் ஒத்திவைப்பு
தொழிலாளர் போராட்டம் ஒத்திவைப்புமேட்டூர்:மேட்டூர், 840, 600 மெகாவாட் அனல்மின் நிலையங்கள், மின்பகிர்மான வட்டங்களில் ஒப்பந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரி, நேற்று, 6ம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சேலத்தில், தொழிலாளர் உதவி கமிஷனர் சண்பகராமன்(சமரசம்) பேச்சு நடத்தினார். அதில் பணி நிரந்தர கோரிக்கை அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என, உதவி கமிஷனர் கூறினார். மேலும் இருதரப்பினரும் சட்டவிதிகளை பின்பற்றி செயல்பட அறிவுறுத்தினார். இதையடுத்து, அடுத்த கட்ட பேச்சு, நாளை காலை, 10:30 மணிக்கு நடக்கும் என கூறப்பட்டது. இதனால் தற்காலிகமாக போராட்டத்தை, தொழிலாளர்கள் ஒத்திவைத்தனர்.