உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயில் பயணி தொலைத்தமடிக்கணினி ஒப்படைப்பு

ரயில் பயணி தொலைத்தமடிக்கணினி ஒப்படைப்பு

ரயில் பயணி தொலைத்தமடிக்கணினி ஒப்படைப்புசேலம்:-சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு, நேற்று காலை எழும்பூர் - சேலம் ரயில் நடைமேடை எண்: 1ல் வந்து நின்றது. அதன், 'பி3' பெட்டியில் ஒரு பேக் கிடந்தது. ரோந்து சென்ற முதல் நிலை போலீசார் கிருபாநிதி மீட்டு, ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.அதை திறந்து பார்த்தபோது, 68,000 ரூபாய் மதிப்பில் மடிக்கணினி, 2 சார்ஜர், 3 புளுடூத் இயர்போன், ஐ.டி., கார்டு இ-ருந்தன.அதன்படி, பேக்கை விட்டுச்சென்றது, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்த சரவணன், 40, என்பதும், சென்னையில் வசிப்பதோடு, கரூரில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்துக்கு வந்திருந்ததும் தெரிந்தது. அவரை வரழைத்த போலீசார், பொருட்களை ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ