உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மனைவியை தாக்கியகுடிகார கணவர் கைது

மனைவியை தாக்கியகுடிகார கணவர் கைது

மனைவியை தாக்கிய'குடி'கார கணவர் கைதுமேட்டூர்:மேட்டூர், கருமலைக்கூடல், சின்னைய ரெட்டி தெருவை சேர்ந்த, பஞ்சு மெத்தை தைத்து விற்பனை செய்வர் கோபிநாத், 39. இவரது மனைவி அனிதா, 28. இவர்களுக்கு இரு மகன், இரு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்த கோபிநாத், வெளியே நின்றிருந்த அனிதாவை திட்டி, குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு செல்லும்படி கூறினார். இதில் தம்பதி இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபிநாத் இரும்பு கம்பியால், அனிதாவை தாக்கியுள்ளார். காயம் அடைந்து மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் கோபிநாத்தை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ