உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெண் சாவில் மர்மம்: உறவினர்கள் போராட்டம்

பெண் சாவில் மர்மம்: உறவினர்கள் போராட்டம்

பெண் சாவில் மர்மம்: உறவினர்கள் போராட்டம்இடங்கணசாலை:சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி இ.காட்டூரை சேர்ந்தவர் ராஜன், 32. எலக்ட்ரீஷியன். இவரது மனைவி சுந்தரி, 28. இவர்களுக்கு மகள், மகன் உள்ளனர். நேற்று காலை, 9:00 மணிக்கு, சுந்தரி துாக்கிட்டு கொண்டதாக கூறி, உறவினரின் கார் மூலம் இளம்பிள்ளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.ஆனால் சாவில் மர்மம் உள்ளதாக கூறி, சுந்தரியின் உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு, ராஜன் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தினர். மகுடஞ்சாவடி போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியால் கலைந்து சென்றனர். மகுடஞ்சாவடி போலீசார் விசாரிக்கின்றனர்.சாலை மறியல்இதையடுத்து சுந்தரியின் உறவினர்கள், சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே, சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, 'ராஜன், அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்' என கூறினர். பின், 'விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் கூறி அனைவரையும் அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ