உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபைல் போனில் பேச்சுமூதாட்டியிடம் நகை பறிப்பு

மொபைல் போனில் பேச்சுமூதாட்டியிடம் நகை பறிப்பு

மொபைல் போனில் பேச்சுமூதாட்டியிடம் நகை பறிப்புசேலம்:சேலம், அழகாபுரம், ராக்கெட் பங்களாவை சேர்ந்த, சீதாராமன் மனைவி ஷீலா, 62. இவர், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, அழகாபுரம், ஸ்ரீராம்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு தோழியை பார்க்க சென்றார். அங்கு சாலையில் நின்றபடி, அவரது தோழியிடம் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இரு வாலிபர்கள், ஷீலா அணிந்திருந்த, 6.5 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு அதிவேகத்தில் தப்பினர். பின் ஷீலா புகார்படி, அழகாபுரம் போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளில் ஏதும் பதிவாகியுள்ளதா என, ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை