மேலும் செய்திகள்
சங்ககிரி அருகே லாரி மீது பைக் மோதி பெண் பலி
25-Feb-2025
உலக தண்ணீர் தின விழா கொண்டாட்டம்சேலம்:சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு துவக்கப்பள்ளியில், உலக தண்ணீர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. முதலில் தண்ணீர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.அதில் பள்ளி வளாகத்தில், 50 அடி நீளத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வரையப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மாணவர் என்ற நிலையில், சிறப்புகள், நீர்வள ஆதாரங்கள், இயற்கை வளங்கள் குறித்து பேசினர். தொடர்ந்து தண்ணீர் சேமிப்பு குறித்த பொன்மொழி, கவிதை, பாடல், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 'சொல்வோம், வெல்வோம்' தலைப்பில் வாசித்தல் திறன் போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, ரோட்டரி காஸ்மாஸ் கிளப் தலைவர் அருண், தனியார் மருத்துவமனை நிறுவனர் சுகவனம், பரிசு வழங்கினர். தலைமை ஆசிரியர் அந்தோணி உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.அதேபோல் சங்ககிரி, கன்னந்தேரி அரசு உயர்நிலைப்பள்ளி, தேசிய பசுமைப்படை மாணவர்கள் சார்பில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், நீரின் முக்கியத்துவம் குறித்து பேசினார். தொடர்ந்து மாணவர்கள், நீரின் மூலக்கூறு வாய்ப்பாடான, 'H2O' வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பயணியருக்கு குடிநீர் வசதிசங்ககிரி டவுன் பஞ்சாயத்து, தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை, பசுமை சங்ககிரி, ஓம் ராம் யோகா அறக்கட்டளை உள்ளிட்ட பொதுநல அமைப்புகள் சார்பில், பவானி சாலை, சேலம் சாலையில் உள்ள பஸ் ஸ்டாப்களில், பயணியர், மக்களுக்கு குடிநீர் வழங்க, தொட்டிகளை அமைத்தனர். தொடர்ந்து மக்களுக்கு குடிநீர் வழங்கி, டவுன் பஞ்சாயத்து தலைவர் மணிமொழி, சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் முருகன் தொடங்கி வைத்தனர். ஓம்ராம் யோகாவின் தலைவர் சுந்தரவடிவேல், தண்ணீர் அமைப்பின் தலைவர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
25-Feb-2025