உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பொங்கல் வைத்து அலகு குத்திபக்தர்கள் வழிபாடு

பொங்கல் வைத்து அலகு குத்திபக்தர்கள் வழிபாடு

பொங்கல் வைத்து அலகு குத்திபக்தர்கள் வழிபாடுசேலம்:சேலம், குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த, 18ல் தொடங்கியது. நேற்று காலை, கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.தொடர்ந்து நீண்ட அலகுகளை வாயில் குத்தியும், காவடி அலகுகளில் அந்தரத்தில் பறந்தபடியும், முதுகில் அலகு குத்தி வாகனங்களை இழுத்து வந்தும், பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.இன்று காலை, 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை பால்குட ஊர்வலம், தங்க கவசம் சார்த்தி சிறப்பு பூஜை; 29 மதியம் அன்னதானம், இரவு சத்தாபரண ஊர்வலம்; 30ல் மஞ்சள் நீராட்டு வைபவம், 31 இரவு திருவிளக்கு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி