உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சொத்துக்காக தந்தையை கொன்ற மகன்கூலிப்படையினர் சுற்றிவளைப்பு

சொத்துக்காக தந்தையை கொன்ற மகன்கூலிப்படையினர் சுற்றிவளைப்பு

சொத்துக்காக தந்தையை கொன்ற மகன்கூலிப்படையினர் சுற்றிவளைப்புசங்ககிரி:சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பக்காலியூர், அருவங்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன், 63. சங்ககிரி ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே, வீடு வாடகைக்கு எடுத்து, உடல் எடையை குறைத்தல் உள்ளிட்டவைக்கான, 'நியுட்ரிஷன் சென்டர்' எனும் ஊட்டச்சத்து மையம் நடத்தினார். இவரது மனைவி ராணி, 53, மகன் அரவிந்தராஜ், 30, மகள் கார்த்திகா. ராஜேந்திரன், ராணி இடையே கருத்து வேறுபாடால் பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு சொந்தமான, 10 ஏக்கர் நிலம் தொடர்பாக பிரச்னை இருந்தது. இந்நிலையில் ராஜேந்திரன், அவரது மையத்தில், கடந்த, 31ல் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சங்ககிரி போலீசார் விசாரித்தனர். இதுதொடர்பாக, சேலம் எஸ்.பி., கவுதம் கோயல், 3 நாட்களாக சங்ககிரியில் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து சங்ககிரி இன்ஸ்பெக்டர் ரமேஷ், இடைப்பாடி இன்ஸ்பெக்டர் பேபி, சங்ககிரி எஸ்.ஐ., கண்ணன் தலைமையில், 3 தனிப்படை போலீசார் விசாரித்தனர்.இந்த கொலையில் ஈடுபட்ட கூலிப்படையினர், புதுச்சேரியில் இருப்பதாக தகவல் கிடைக்க, அங்கு சென்ற போலீசார், 7 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், சங்ககிரி ஆர்.எஸ்., பகுதியை சேர்ந்த மனோஜ்குமார், 31, மாவெளி பாளையம் சிவசங்கர், 30, கஸ்துாரிப்பட்டி சசிகுமார், 22, கார்த்திகேயன், 23, கோழிக்கால்நத்தம் லேகபிரகாஷ், 21, புலிப்பாளையம் கவுதம், 21, ரகுநாத், 23, என தெரிந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ராஜேந்திரனின் மகன் அரவிந்தராஜ், சொத்துக்கு ஆசைப்பட்டு கூலிப்படையை ஏவி, தந்தையை கொன்றது தெரிந்தது. கூலிப்படையினரிடம் இருந்து, 3.50 லட்சம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர். தவிர அரவிந்த்ராஜ், 30, ராணி, 53, ஆகியோரிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ