உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சட்டம் அமல்படுத்துவோரிடம் கேள்வி கேட்க வேண்டாம்

சட்டம் அமல்படுத்துவோரிடம் கேள்வி கேட்க வேண்டாம்

'சட்டம் அமல்படுத்துவோரிடம் கேள்வி கேட்க வேண்டாம்'ஆத்துார்:விளம்பர பேனர் தொடர்பாக வணிகர்கள், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன், சேலம் மாவட்டம் ஆத்துார் நகராட்சி அலுவலகத்தில் நேற்று கூட்டம் நடந்தது. கமிஷனர் சையதுமுஸ்தபா கமால் தலைமை வகித்து பேசியதாவது:நகராட்சி பகுதிகளில் விளம்பர பேனர்கள் அதிகளவில் உள்ளன. இவற்றை முறைப்படுத்த பேனருக்கு, 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். உரிய அனுமதியின்றி விளம்பர பேனர் வைக்க கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம், பேனர் வைப்பது தொடர்பாக, தொடர்பு விபரம் உள்ளிட்ட அறிவிப்புகள் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்' என்றார்.மா.கம்யூ., செயலர் முருகேசன், ''துக்க நிகழ்வு, அவசர கூட்டம் போன்றவற்றுக்கு உடனே வைக்கப்படும் பேனர்களுக்கு எப்படி அனுமதி பெற முடியும். விடுமுறை நாளில் எப்படி அனுமதி பெறுவது,'' என்றார்.ஆத்துார் டவுன் இன்ஸ்பெக்டர் அழகுராணி, 'சட்டம் போட்டவர்களை தான் கேள்வி கேட்க வேண்டும். அவற்றை அமல்படுத்துவோரிடம் கேள்வி எழுப்ப வேண்டாம். உங்களை யாரும் பிளக்ஸ் வைக்க வேண்டாம் என கூறவில்லை. நிபந்தனைக்கு கட்டுப்பட்டு வைக்கவும்,'' என்றார்.இதில் பேனர் கடை உரிமையாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், வணிகர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி