உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பு.த.க., நிர்வாகி மீதுமர்ம கும்பல் தாக்குதல்

பு.த.க., நிர்வாகி மீதுமர்ம கும்பல் தாக்குதல்

பு.த.க., நிர்வாகி மீதுமர்ம கும்பல் தாக்குதல்கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். புதிய தமிழகம் கட்சியின் ஒன்றிய செயலரான இவர், 'மைக்செட்' தொழிலும் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, வேல்முருகன் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் நுழைந்து தாக்கியுள்ளனர். தட்டிக்கேட்ட உறவினர்கள் சந்திரசேகர், வனிதாவையும், அக்கும்பல் தாக்கியுள்ளது. காயமடைந்த மூவரும், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ