உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஸ் கண்டக்டரை தாக்கியகல்லுாரி மாணவர் கைது

பஸ் கண்டக்டரை தாக்கியகல்லுாரி மாணவர் கைது

பஸ் கண்டக்டரை தாக்கியகல்லுாரி மாணவர் கைதுபெத்தநாயக்கன்பாளையம்:சேலத்தில் இருந்து வெள்ளிமலை நோக்கி, நேற்று முன்தினம், அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. வாழப்பாடியில், 3 பேர் ஏறி செக்கடிப்பட்டிக்கு, படியில் நின்றபடி பயணித்தனர். அவர்களை, பஸ் கண்டக்டரான, தாண்டனுாரை சேர்ந்த செந்தில்குமார், 51, உள்ளே வரும்படி தெரிவித்தார்.இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. செக்கடிப்பட்டிக்கு பஸ் சென்றதும், 3 பேரும் செந்தில்குமாரிடம் தகராறு செய்தனர். இதுகுறித்து அவர் புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்து, அரசு கல்லுாரி மாணவர் விஜய், 20, ரீகன், 21, பெயின்டர் விக்ரம், 23, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை