மேலும் செய்திகள்
சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
10-Apr-2025
சமரச மையம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்சேலம்:சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின், சமரச தீர்வு மையம் சார்பில், சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தொடங்கி வைத்தார்.அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை சென்ற ஊர்வலம், மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் நீதிமன்றங்களில் ஆண்டு கணக்கில் காத்திருப்பதை விட, சமரச மையம் மூலம் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு கண்டு பயன்பெற வலியுறுத்தி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி சென்றனர்.நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வக்கீல்கள், அரசு, தனியார் சட்டக்கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதேபோல், மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிபதி கமலக்கண்ணன் கொடியசைத்து, வக்கீல்கள் பேரணியை தொடங்கி வைத்தார். மாஜிஸ்திரேட்கள் பத்மபிரியா, மயில்சாமி உள்பட பலர், சின்னபார்க் வழியே சென்று மீண்டும் நீதிமன்றத்தை அடைந்தனர். சங்ககிரி நீதிமன்ற வளாகத்தில், சமரச மையம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம், சார்பு நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் தலைமையில், திருச்செங்கோடு, ஈரோடு சாலைகள் வழியே சென்று, மீண்டும் கோர்ட்டில் முடிந்தது. நீதிபதிகள் இளமதி, பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.
10-Apr-2025