உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதை மாத்திரை விற்றஇரண்டு பேருக்கு காப்பு

போதை மாத்திரை விற்றஇரண்டு பேருக்கு காப்பு

போதை மாத்திரை விற்றஇரண்டு பேருக்கு 'காப்பு'பள்ளிப்பாளையம்:போதை மாத்திரை விற்பனை செய்த, இரண்டு பேரை கைது செய்த போலீசார், 220 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.பள்ளிப்பாளையம் அருகே, நாட்டாகவுண்டம்புதுார் பகுதியில் உள்ள ஆற்று படித்துறை அருகே, போதை மாத்திரை விற்பனை நடந்து வருகிறது. போதை மாத்திரை வாங்க எந்நேரமும் இளைஞர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இளைஞர்களை குறிவைத்தே இந்த போதை மாத்திரை விற்பனை நடந்து வருகிறது. நேற்று காலை முதலே, பள்ளிப்பாளையம் போலீசார் நாட்டாகவுண்டம்புதுார் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, இரண்டு பேர் போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கோட்டக்காடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜீவானந்தம், 24, அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ராகுல், 21, என, தெரியவந்தது.மேலும் ஒரு மாத்திரையை, 50 ரூபாய்க்கு வாங்கி, 300 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. போதை மாத்திரை விற்பனை செய்த, இரண்டு பேரையும், நேற்று மாலை பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்து, 220 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை