உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தம்பதியை கடத்தி கைதான 2 பேரிடம் விசாரணை லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக புகார்தாரர் மீது பகீர்

தம்பதியை கடத்தி கைதான 2 பேரிடம் விசாரணை லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக புகார்தாரர் மீது பகீர்

தம்பதியை கடத்தி கைதான 2 பேரிடம் விசாரணை லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக புகார்தாரர் மீது 'பகீர்'ஏற்காடு,:தம்பதியை கடத்திய புகாரில், 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்தபோது, புகார் அளித்த பெண், லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக, 'திடுக்' தகவலை தெரிவித்தனர்.சேலம் மாவட்டம் ஏற்காடு, முருகன் நகரை சேர்ந்த சாமுவேல், மனோரஞ்சிதம் தம்பதியின் மகள் பிரவீனா. இவருக்கும், திருச்சி மாவட்டம் வெள்ளாளப்பட்டியை சேர்ந்த நிர்மல் குமாருக்கும் திருமணமாகி, 10 வயதில் மகன் உள்ளார். ஆனால் தம்பதியர், தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் பிரவீனா, நேற்று ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனுவில், 'நேற்று முன்தினம் இரவு, என் பெற்றோரை, நிர்மல்குமார், முருகானந்தம், பிரசாந்த் உள்பட, 7 பேர் கும்பல் கடத்தி விட்டது' என கூறியிருந்தார். இதை அறிந்த கடத்தல்காரர்கள், பிரவீனாவின் பெற்றோரை, அவரது வீட்டில் விட்டு சென்றனர். இதை அறிந்த போலீசார், மலைப்பாதையில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு வந்த, நிர்மல்குமார், முருகானந்தத்தை கைது செய்து விசாரித்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:கைதான, 2 பேரிடம் விசாரித்தோம். அப்போது அவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். குறிப்பாக புகார் அளித்த பிரவீனா, சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை உள்பட, பல்வேறு இடங்களில் பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். அவரது தற்போதைய கணவர் பூபதியுடன் சேர்ந்து, பலரிடம் காரை வாடகைக்கு எடுத்து, வேறு இடத்தில் அடமானம் வைத்தும், மோசடி செய்தும், விற்றும், பணம் வாங்கி உள்ளார். அவரது முன்னாள் கணவர் நிர்மல்குமாரிடம், 3.50 லட்சம் ரூபாய், ஜலகண்டாபுரம், சுந்தரம் செட்டி தெரு முருகானந்தத்திடம், 16 லட்சம் ரூபாய், சேலம், சீலநாயக்கன்பட்டி பிரசாந்திடம், 3 லட்சம் ரூபாய், 'இன்னோவா' காரை வாங்கிவிட்டு, இதுவரை திருப்பி தரவில்லை. இதனால் பிரவீனாவின் பெற்றோரை அழைத்துச்சென்று விசாரித்ததாக, கைது செய்யப்பட்ட, 2 பேரும் கூறினர்.குறிப்பாக பிரவீனா, பூபதியுடன் சேர்ந்து, பல இடங்களில் பண மோசடி செய்ததாக புகார் உள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் தம்பதியை கடத்திய புகாரில், 2 பேரை கைது செய்து, 5 பேரை தேடுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.தற்போதைய கணவர் கைதுஇந்நிலையில் பெங்களூரில் கடந்த அக்டோபரில், ஒரு காரை வாடகைக்கு எடுத்து, தற்போது வரை திருப்பி தரவில்லை என, பெங்களூரு போலீஸ் ஸ்டேஷனில், பூபதி மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏற்காடு ஸ்டேஷனில் இருந்த வெளியே வந்த பூபதியை, பெங்களூரு போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ