மேலும் செய்திகள்
நாளை சூரிய ஒளி விழும் நிகழ்வு
20-Feb-2025
சூரிய ஒளி நிகழ்வு2ம் நாளும் ஏமாற்றம்தாரமங்கலம்:தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் பிப்., 21, 22, 23ல், சுவாமி மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடக்கும்.அதன்படி நேற்று முன்தினம், அந்நிகழ்வை காண வந்த பக்தர்கள், கொடிமரம், நந்தி மண்டபம் முன் கூட்டமாக நின்று, சூரியன் உள்ளே செல்வதை மறைத்தனர். இதனால் சூரிய ஒளி தென்படாமல், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.அதேபோல் நேற்று மாலை, 4:00 மணிக்கே, ஏராளமான பக்தர்கள் கோவிலில் காத்திருந்தனர். ஆனால், 6:00 மணி வரை காத்திருத்தும், சூரிய ஒளி விழவில்லை. இதனால், 2ம் நாளாக பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் இன்று தெரியும் என்ற நம்பிக்கையுடன், பக்தர்கள் சென்றனர்.
20-Feb-2025