உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்டட தொழிலாளியிடம் பணம் பறித்த 2 பேர் கைது

கட்டட தொழிலாளியிடம் பணம் பறித்த 2 பேர் கைது

கட்டட தொழிலாளியிடம் பணம் பறித்த 2 பேர் கைதுமேட்டூர்:கட்டட தொழிலாளியை மிரட்டி, பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.மேட்டூர், எலிகரடு, கட்டட தொழிலாளி மாரியப்பன், 35. நேற்று காலை, 8:00 மணிக்கு மாரியப்பன், அவரது நண்பர்கள் மேட்டூர் காவிரியாற்றில் குளிக்க சென்றனர். நண்பர்கள் முன்னால் சென்ற நிலையில், மாரியப்பன் பின்னால் சென்றார். அப்போது அங்கு சென்ற குள்ளவீரன்பட்டி பிரகாஷ், 34, சங்கிலி முனியப்பன் கோயில், மணி, 33 இருவரும் கத்தியை காட்டி மிரட்டி மாரியப்பனிடம் இருந்து, 350 ரூபாய், மொபைல் போனை பறித்து சென்றனர்.மாரியப்பன் கொடுத்த புகார்படி, நேற்று காலை பிரகாஷ், மணி இருவரையும் மேட்டூர் போலீசார் கைது செய்தனர். இதில், மணி மீது மேட்டூர், கருமலைக்கூடல், நங்கவள்ளி ஸ்டேஷன்களில் ஐந்து கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.பிரகாஷ் மீது மேட்டூர், சேலம் பள்ளப்பட்டி, பேர்லாண்ட்ஸ், சூரமங்கலம், சங்ககிரி, மேட்டூர் ஸ்டேஷன்களில், கொலை, வழிப்பறி உள்பட, 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை