உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 4 வயது குழந்தை கிணற்றில் வீசி கொலை கள்ளக்காதலுக்கு இடையூறால் தாய் வெறிச்செயல்

4 வயது குழந்தை கிணற்றில் வீசி கொலை கள்ளக்காதலுக்கு இடையூறால் தாய் வெறிச்செயல்

ப.வேலுார்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தாய் உள்பட இருவரை, பரமத்தி வேலுார் போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே காந்திபுரத்தை சேர்ந்-தவர் முத்தையன், 22; கூலி தொழிலாளி. இவரது மனைவி அதே பகுதியை சேர்ந்த சினேகா, 20; தம்பதியரின் மகள் பூவரசி, 4; சினேகாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சரத்குமார், 21, என்பவ-ருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதுதொடர்பாக நாமக்கல் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், நேற்று முன்தினம் பேச்சு-வார்த்தை நடந்தது. அதில் 'இனிமேல் கணவனுடன் வசிக்-கிறேன்' என்று சினேகா தெரிவித்துள்ளார்.பின், நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து, கணவனுக்கு தெரி-யாமல் குழந்தையுடன் மாயமான சினேகா, ப.வேலுார் அருகே சேலுார், செல்லப்பம்பாளையத்தை சேர்ந்த உறவினரான கோகிலா, 40, வீட்டுக்கு சென்றார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் குழந்தையை கொலை செய்ய இருவரும் முடிவு செய்தனர். நேற்று மதியம் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த குழந்-தையை அப்பகுதியில் உள்ள கிணற்றில் சினேகா வீசியுள்ளார். இதை நேரில் பார்த்த சிலர் அதிர்ச்சி அடைந்து ப.வேலுார் போலீ-சாருக்கு தகவல் தெரிவித்தனர்.நாமக்கல் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., முருகேசன், ப.வேலுார் எஸ்.ஐ., குமார் விரைந்து சென்றனர். விசாரணையில் குழந்தையை கிணற்றில் வீசி கொன்றதை சினேகா, ஆலோசனை கூறியதாக உறவினர் பெண் கோகிலா ஒப்புக்கொள்ளவே, ப.வேலுார் போலீசார் இருவரையும் கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், பெற்ற குழந்தையை தாயே கிணற்றில் வீசி கொலை செய்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை