கடின உழைப்பு, பயிற்சி இருந்தால் அரசு தேர்வில் தேர்ச்சி பெற முடியும்
மேட்டூர்: மேட்டூர் கிளை நுாலகம், வாசகர் வட்டம் சார்பில் அரசு பணி தேர்வு எழுதுவோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த குரூப் - 4 தேர்வில் அந்த கிளை நுாலகத்தில் பயிற்சி பெற்ற, குணசீலன், சக்திவேல், பிரியா, முத்துக்குமார், விஜய-ராஜா, சுகன்யா, தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்-திய தேர்வில் தேர்ச்சி பெற்ற லோகேஷ், ரவி, கலைச்செல்வன் ஆகியோருக்கு, நேற்று, மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி பாராட்டு தெரிவித்து பதக்கம் அணிவித்தார்.தொடர்ந்து அவர் பேசியதாவது:தற்போது அரசு தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். கடின உழைப்பு, பயிற்சி இருந்தால் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற முடியும். அதற்கேற்ப அனைவருக்கும் பொருளாதாரம் கைகொடுக்க வேண்டும்.நான் மத்திய ஆட்சி பணிக்கு தேர்வு எழுதியபோதும், 5 ஆண்டுக-ளுக்கு பின்பே தேர்ச்சி பெற முடிந்தது. அரசு தேர்வு எழுத நினைப்பவர்கள், நன்றாக படிக்க வேண்டும். ஒரு தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும், அடுத்த தேர்வு எழுத முயற்சிக்க வேண்டும். உங்களுடன் படித்த சிலர், முன்னதாக தேர்ச்சி பெற்று பணிக்கு சென்றிருக்கலாம். அதற்காக நீங்கள் மனம் தளர்ந்து போக கூடாது. அடுத்து நீங்களும் சிறப்பாக தேர்வு எழுதி அரசு பணிக்கு சென்றுவிட முடியும். அரசு பணிக்கு செல்லும் அனைவ-ருக்கும் வாழ்த்து.இவ்வாறு அவர் பேசினார்.வாசகர் வட்ட தலைவர் சந்திரமோகன், செயலர் நாகலட்சுமி உள்-ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.