கைலாசநாதர் கோவிலில்நாளை கொடியேற்றம்
கைலாசநாதர் கோவிலில்நாளை கொடியேற்றம்தாரமங்கலம் : தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலுக்கு உட்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் கடந்த, 29ல் நடந்தது. நேற்று முன்தினம் கோவிலில் கொடி இறக்கப்பட்டு தேரோட்ட விழா நிறைவடைந்தது. தொடர்ந்து கைலாசநாதர் கோவில் தேரோட்டம், தைப்பூசத்தில் தொடங்கி, 3 நாட்கள் நடக்கும். அதற்கு இன்று கோவிலில், விக்னேஷ்வர பூஜை, கிராமசாந்தி செய்து, நாளை காலை, 9:10 மணிக்கு மேல் கொடியேற்றம் நடக்கும். இதில் பக்தர்கள் பங்கேற்க, கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.