வள்ளலார் படத்துக்கு பூஜை
வள்ளலார் படத்துக்கு பூஜைசங்ககிரி, புது பஸ் ஸ்டாண்ட் அருகே ஆஞ்சநேய நகரில் உள்ள, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில், தைப்பூசத்தை ஒட்டி வள்ளலார் படம் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள், வள்ளலார் பாடல்களை பாடினர். மேலும் ஜோதி தரிசன நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா குழு சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.