சிறை தியாகிகள்நினைவு கூட்டம்
சிறை தியாகிகள்நினைவு கூட்டம்சேலம்,:சேலம் வடக்கு, மாநகர் மா.கம்யூ., சார்பில், மத்திய சிறைச்சாலை முன், சிறை தியாகிகள் நினைவு நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், 1950 பிப்., 11ல், சேலம் மத்திய சிறையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த, 22 கம்யூனிஸ்டுகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி, சேலம் மாவட்ட அமைப்பாளர் முத்துக்கண்ணன், மாநகர செயலர் பிரவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.