ஹெச்.எம்.,க்கு நோட்டீஸ்
ஹெச்.எம்.,க்கு 'நோட்டீஸ்'கெங்கவல்லி:கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த பிப்., 14ல் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது மாணவர்கள் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த வீடியோ, 17ல் சமூக வலைதளத்தில் பரவியது. இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் விசாரித்தனர். இதுகுறித்து, சேலம் முதன்மை கல்வி அலுவலர் கபீர் கூறுகையில், ''வீடியோ வெளியானது தொடர்பாக, தலைமை ஆசிரியர் சாமுவேல் விளக்கம் அளிக்க, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.