மேலும் செய்திகள்
துவரையில் பூச்சி மேலாண்மை விவசாயிகளுக்கு பயிற்சி
08-Feb-2025
திருச்சியில் பயிற்சிபெற்ற விவசாயிகள்வீரபாண்டி:வீரபாண்டி வேளாண் துறை, 'அட்மா' திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட, 50 விவசாயிகள், மாநில அளவில் கண்டுணர்வு பயணமாக, நேற்று திருச்சி அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மத்திய பயிர் பாதுகாப்பு மையத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.பூச்சிகளை நிர்வகிப்பதற்கு நிலையான அணுகுமுறை, பொருளாதாரம், சுகாதாரம், சுற்றுச்சூழல் அபாயங்களை குறைக்கும் வழி, இயற்கை பூச்சி கட்டுப்பாட்டு வழி, ரசாயன பூச்சிக்கொல்லிகளை தவிர்ப்பது குறித்து, பல்வேறு தொழில்நுட்பங்களை கண்டு பயிற்சி பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன், உதவி தொழில்நுட்ப மேலாளர் தீபன் முத்துசாமி செய்திருந்தனர்.
08-Feb-2025