மேலும் செய்திகள்
திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம்
12-Mar-2025
பா.ஜ., பேனர் கிழிப்புபனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை ஒட்டி, பல்வேறு அரசியல் கட்சியினர், நண்பர் குழுக்கள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள், சந்தைப்பேட்டை, திருவள்ளுவர் சாலை உள்ளிட்ட இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டன. நேற்று முன்தினம், பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் பட்டிமன்றம் நடந்தது. இந்நிலையில் நள்ளிரவு, சந்தைப்பேட்டை, பழனி ஆண்டவர் கோவில், சேலம் சாலையில் பா.ஜ.,வினர், 5 இடங்களில் வைத்திருந்த பேனர்களை, மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி இருந்தனர். நேற்று, பனமரத்துப்பட்டி நகர பா.ஜ., தலைவர் ராஜா அளித்த புகார்படி, பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
12-Mar-2025