போதை பொருள் சோதனைசிக்காததால் விழிப்புணர்வு
போதை பொருள் சோதனைசிக்காததால் விழிப்புணர்வுமேட்டூர்:கொளத்துார், பாலமலை ஊராட்சியில், 33 குக்கிராமங்கள் உள்ளன. நேற்று காலை, கொளத்துார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், எஸ்.ஐ., மணிமாறன், மேட்டூர் மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ., ராமச்சந்திரன் தலைமையில் போலீசார், 3 குழுக்களாக, ராமன்பட்டி, கெம்மம்பட்டி, கடுக்காமரத்துகாடு உள்பட, 20 கிராமங்களில் வீடுகள், ஓடை கரையோரம், கிணறுகளின் சுற்றுப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். ஆனால் போதைப்பொருட்கள் எது வும் சிக்கவில்லை. பின், போதை பொருட்களால் ஏற்படும் தீமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு திரும்பினர்.