உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாலியல் புகார் எதிரொலிநிர்வாகிகளிடம் விசாரணை

பாலியல் புகார் எதிரொலிநிர்வாகிகளிடம் விசாரணை

பாலியல் புகார் எதிரொலிநிர்வாகிகளிடம் விசாரணைசேலம்:சேலம் அரசு மருத்துவமனை ஒப்பந்த நிறுவனத்திடம், துாய்மைப்பணி மேற்பார்வையாளராக வேலை செய்த, 30 வயது பெண், பணி காலத்தில் பாலியல் கொடுமைக்கு ஆளானார்.அவரிடம், இரு நாட்களுக்கு முன் விசாரணை நடந்தது. அவரது வாக்குமூலப்படி, நேற்று விசாரணை நடந்தது.டீன் அலுவலகம் எதிரே உள்ள தனி அறையில், விசாகா கமிட்டி சேர்மன் மணிமேகவலை, இணை பேராசிரியர்கள் முகமது இலியாஸ் ரகமத்துல்லா, அருள்குமரன் விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் ஒப்பந்த நிறுவன நிர்வாகிகள், செக்யூரிட்டிகள், மேற்பார்வையாளர்கள், மகப்பேறு மருத்துவ பிரிவில் பணியாற்றிய செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள்உள்ளிட்ட பல்வேறு நிலை ஊழியர்களிடமும் விசாரித்து, வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை