கவுன்சிலர் மீது தாக்குதல்தி.கோட்டில் பரபரப்பு
கவுன்சிலர் மீது தாக்குதல்தி.கோட்டில் பரபரப்புதிருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி, 9வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் ரமேஷ், 50; இவர், நேற்று இரவு, 8:00 மணியளவில், தொண்டிக்கரடு முனியப்பன் கோவில் அருகே, பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு, 45, செந்தில்மணி, 48, ஆகியோர் ரமேஷை தாக்கினர். இதில் காயமடைந்த ரமேஷ், திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகார்படி, திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தி.மு.க., கவுன்சிலர் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தால், திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.