துாய்மை பணியாளர் ஓய்வுபி.டி.ஓ., மரியாதை
துாய்மை பணியாளர் ஓய்வுபி.டி.ஓ., மரியாதைஆத்துார்:ஆத்துார் அருகே கல்பகனுார் ஊராட்சியில் குடிநீர் தொட்டி இயக்குபவர் நடராஜன், துாய்மை பணியாளர் சேகர். இவர்கள், 37 ஆண்டாக பணிபுரிந்து நேற்று ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு, ஊராட்சி அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா, பி.டி.ஓ., பரமசிவம் தலைமையில் நடந்தது.அப்போது இருவரையும் பாராட்டிய பி.டி.ஓ., தொடர்ந்து காரில், அவர்களது வீட்டுக்கு அழைத்துச்சென்று விட்டார்.