மின்சாரம் பாய்ந்து பெண் பலி
மின்சாரம் பாய்ந்து பெண் பலிசேலம்:சேலம், திருவாக்கவுண்டனுார், சுகுமார் காலனியை சேர்ந்த, மாற்றுத்திறனாளி ரமேஷ். இவரது மனைவி கனகவள்ளி, 33. இவர்களுக்கு, 3 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை, 9:30 மணிக்கு, கனகவள்ளி வீடு அருகே சாலையில் உள்ள பொது குடிநீர் தொட்டிக்கு சென்று தண்ணீர் பிடிக்க, டேங்கின் மோட்டார் ஸ்விட்சை ஆன் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அவரை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இறந்தது தெரியவந்தது. சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.