டீசல் ஊற்றி தீடிரைவர் சாவு
டீசல் ஊற்றி தீடிரைவர் சாவு சேலம்:சேலம், செங்கரடு, தாத்தையங்கார்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 57. லாரி டிரைவரான இவர், தினமும் மது அருந்திவிட்டு வந்து, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில் கடந்த, 29ல் போதையில் வந்த அவர், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு கோபம் அடைந்தார். அப்போது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அங்கிருந்தவர்கள், தீயை அணைத்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.