உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முருகன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

முருகன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

முருகன் கோவில் தேரோட்டம் கோலாகலம்சேலம்:சேலம், பெருமாம்பட்டி, வலியன்காடு வெற்றிவேல் முருகன் கோவில் பங்குனி திருவிழா கடந்த மார்ச், 28ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.நேற்று காலை, 7:00 மணிக்கு மூலவர் வெற்றிவேல் முருகன், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய உற்சவருக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளச்செய்தனர். ஏராளமான பக்தர்கள், 'அரோகரா' கோஷம் முழங்க, தேரை வடம்பிடித்து இழுத்தனர். செம்மண்திட்டு வழியே திருமலைகிரி, தண்ணீர்பந்தல் காடு, மொட்டையன் தெரு, பாலிக்காடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியே மீண்டும் கோவிலை அடைந்தது. இன்று காலை, 11:00 மணிக்கு வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம், மதியம் அன்னதானம், மாலை சூரசம்ஹாரம், பால்குடம், காவடி, அலகு எடுத்தல் உள்ளிட்டவை நடக்கின்றன. நாளை இடும்பனுக்கு சிறப்பு பூஜையுடன் பங்குனி திருவிழா நிறைவு பெறும்.இன்று திருக்கல்யாணம்சேலம், அழகாபுரம் பெரியபுதுாரில் உள்ள, ஆனந்த நிலையம் டிரஸ்ட் அமைப்பின், சேலம் தென் திருப்பதி கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.இதை ஒட்டி நேற்று மாலை, சேலம், ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து, திரளான பக்தர்கள், திருமணத்துக்கு சீர் வரிசை தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இன்று காலை, 9:30 மணிக்கு, மகா சங்கல்பத்துடன் கல்யாண உற்சவ யாக பூஜை தொடங்கி, பட்டாச்சாரியார்களால் பெருமாள் கரத்தில் திருமாங்கல்யம் வைத்து பூஜை செய்து தாயார் கழுத்தில் அணிவித்து திருக்கல்யாணம் நடக்கிறது.காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவி லில் நேற்று காவடி ஊர்வ லம் நடந்தது. முன்னதாக கோவில் பரம்பரை அறங்காவலர் சரஸ்வதி தலைமையில், ஆட்டையாம்பட்டி திருமணிமுத்தாறு பாலம் அருகே பூசாரிக்காட்டில், அலங்கரிக்கப்பட்ட பல்வேறு காவடிகளுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து மேள தாளம் முழங்க புறப்பட்ட ஊர்வலம், மேட்டுக்கடை, ஆட்டையாம்பட்டி பிரதான சாலை, மருளையாம்பாளையம் வழியே காளிப்பட்டி கோவிலை அடைந்தது. ஊர்வலத்தில் சுற்றுவட்டாரத்தினர் காவடி எடுத்து வந்தனர்.மணக்கோலத்தில் திருவீதி உலாஆத்துார் அருகே வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. இரவு, திருக்கல்யாணம் நடந்தது.தொடர்ந்து மணக்கோலத்தில் மலை மீதுள்ள கோவிலை சுற்றி பாலசுப்ரமணியர், வள்ளி, தெய்வானையுடன் திருவீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.அதேபோல் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், 2,000க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து வந்து, உற்சவர் முருகன் மீது ஊற்றி அபி ேஷகம் செய்தனர். அப்போது மூலவர் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். தம்மம்பட்டி, திருமண்கரடு பாலதண்டாயுதபாணி கோவிலில், மூலவர் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர், வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் அருள்பாலித்தார். அதேபோல் வீரகனுார், ராயர்பாளையம் குமரன் மலையில் உள்ள முருகன் சுவாமிக்கு அபி ேஷக பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி