இன்று சிறப்பு ரயில் இயக்கம்
இன்று சிறப்பு ரயில் இயக்கம்சேலம், தமிழ் புத்தாண்டு, விஷூ பண்டிகை கால பயணியர் நெரிசலை குறைக்க, சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:பெங்களூரு - எர்ணாகுளம் சிறப்பு ரயில் ஏப்., 12(இன்று) மாலை, 4:35க்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே மறுநாள் அதிகாலை, 3:00 மணிக்கு எர்ணாகுளத்தை அடைகிறது. இந்த ரயில் சேலத்துக்கு இரவு, 8:20, ஈரோடு, 9:25க்கு வந்து செல்கிறது. மறுமார்க்க ரயில், வரும், 14 இரவு, 10:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை, 10:55க்கு பெங்களூருவை அடையும். இந்த ரயில் ஈரோட்டுக்கு அதிகாலை, 4:15, சேலத்துக்கு, 5:00 மணிக்கு வந்து செல்லும்.