உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இயற்கை முறையில்குண்டுமல்லி பதியம்உற்பத்திக்கு விழிப்புணர்வு

இயற்கை முறையில்குண்டுமல்லி பதியம்உற்பத்திக்கு விழிப்புணர்வு

பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 200 ஏக்கரில் குண்டுமல்லி பயிரிடப்பட்டுள்ளது. இதனால் இயற்கை முறையில் குண்டுமல்லி செடி பதியம் உற்பத்தி செய்தல் மற்றும் மகசூல் பெருக்கம் குறித்து, நாமக்கல் தனியார் வேளாண் கல்லுாரி மாணவர்கள், விவசாயிகளுக்கு நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது இயற்கை முறையில் உற்பத்தி பெருக்குதல் சுற்றுச்சுழல் மற்றும் நிலத்தின் ஆரோக்கியத்துக்கு ஏற்றது. செடியின் நீளமுள்ள பழைய தண்டுகளை தேர்வு செய்து, நன்கு வடிகால் அமைப்புள்ள மண் சேர்க்கையில் பதிய வைக்க வேண்டும். அதில் ஆக்சிஜன் பேஸ்ட், தேன், ஆலோவேரா சேர்க்க வேண்டும். இது, வேர் உற்பத்தியை ஊக்குவிக்கும். சீராக நீர் தெளித்தால், 15 - 20 நாட்களுக்கு வேர் வளரும். ஒரு மாதத்துக்கு பின் தனியே எடுத்து நடவு செய்யலாம் என, குண்டுமல்லி விவசாயிகளுக்கு நேரடி செயல்விளக்கம் அளித்து, மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை