உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கெங்கவல்லி, பூலாம்பட்டி இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

கெங்கவல்லி, பூலாம்பட்டி இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

கெங்கவல்லி, :கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷன், 1989ல், புறக்காவல் நிலையமாக தொடங்கப்பட்டது. பின் எஸ்.ஐ., கட்டுப்பாட்டிலும், பின் வீரகனுார் இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டிலும் செயல்பட்டது.சமீபத்தில் கெங்கவல்லி ஸ்டேஷன் தரம் உயர்த்தப்பட்டு, அதன் முதல் இன்ஸ்பெக்டராக, சாந்தி என்பவர் நியமிக்கப்பட்டார். தஞ்சாவூர், அய்யம்பேட்டையில் பணிபுரிந்த அவர், நேற்று கெங்கவல்லியின் முதல் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார்.அதேபோல் பூலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்பட்டு, அதன் முதல் இன்ஸ்பெக்டராக ரேணுகாதேவி என்பவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர், கோவை மாநகரில், எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை