உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் ஆலோசனை

மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் ஆலோசனை

சேலம்:சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, தி.மு.க., அலுவலகத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட அளவில் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமை வகித்தார். அதில் தேர்தல் கமிஷனின், எஸ்.ஐ.ஆர்., சீராய்வு நடவடிக்கையை கண்டித்தும், தமிழகத்தில் அதை நிறுத்தக்கோரி, வரும், 11 காலை, சேலம் கோட்டை மைதானத்தில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அனைத்து கட்சி சார்பில் பெரும்பாலோர் பங்கேற்க வேண்டும். அதன்மூலம் தேர்தல் கமிஷன் நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும் என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி, மத்திய மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மாநகர் செயலர் ரகுபதி உள்பட, மதச்சார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ