| ADDED : நவ 21, 2025 02:02 AM
சேலம், தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர் நலச்சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. உதவி தோட்டக்கலை அலுவலர் சங்க மநால தலைவர் முருகன் தலைமை வகித்தார்.அதில் வேளாண் துறையில் செயல்படுத்தும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் (யு.ஏ.டி.டி.,) - 2.0 என்பது உழவர்களை பாதிக்கும் என்பதால், அத்திட்டத்தை கைவிட வேண்டும்; தோட்டக்கலை துறை அலுவலர்களை, அவரச காலத்தில் இடமாற்றுவதை உடனே நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நலச்சங்க மாவட்ட தலைவர் அனுஷா, உதவி அலுவலர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.