உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டேக்வாண்டோவில் வெண்கலம் மாணவிக்கு ஊக்கத்தொகை

டேக்வாண்டோவில் வெண்கலம் மாணவிக்கு ஊக்கத்தொகை

சேலம்: ஒடிசா மாநிலம் கட்டாக்கில், தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டி, கடந்தாண்டு செப்டம்பரில் நடந்தது.அதில் தமிழக அணி சார்பில், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சேலம், பழைய சூரமங்கலத்தை சேர்ந்த, வெள்ளி தொழிலாளி பரமசிவம் - தமிழரசியின் மகளான, 6ம் வகுப்பு மாணவி பாக்ய ஸ்ரீ, 13, மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.சர்வதேச, தேசிய, மாநில அளவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களை ஊக்குவிக்க, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடந்த, 18ல், சென்னையில் விழா நடந்தது. அதில் பாக்யஸ்ரீக்கு ஊக்கத்தொகையாக, 1.5 லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டது. பாக்யஸ்ரீ, அவரது பயிற்சியாளர் செந்தில்குமாரை, சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை