பெண் போலீசிடம் ரூ.14 லட்சம் மோசடிஆயுதப்படை எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்
பெண் போலீசிடம் ரூ.14 லட்சம் மோசடிஆயுதப்படை எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'சேலம் சேலம் மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு எஸ்.எஸ்.ஐ., யோகாம்பாள். இவர் கடந்த ஆண்டு மார்ச்சில், போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார்: மாநகர ஆயுதப்படையில் பணிபுரியும் எஸ்.எஸ்.ஐ., பாஸ்கரனிடம், நான், என் உறவினர்கள், 17 பேர் சேர்ந்து, 2012 முதல் ஏலச்சீட்டில் பணம் கட்டி வந்தோம். 2019 இறுதி வரை கட்டிய, 23.70 லட்சம் ரூபாயை, பாஸ்கரன் திருப்பி கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும், 4 ஆண்டாக இழுத்தடித்து வருகிறார்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், பல்வேறு கட்டங்களாக விசாரித்த நிலையில், பாஸ்கரன், 3 லட்சம் ரூபாய் கொடுத்தார். மீதி, 20.70 லட்சம் ரூபாய்க்கு பதில், 14 லட்சம் ரூபாய் தான் வழங்க வேண்டும் என, அவர் கூறியுள்ளார். அந்த பணத்தையும் அவர் வழங்கவில்லை. இதுகுறித்த அறிக்கை, கமிஷனரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனால் கடந்த, 26ல், பாஸ்கரனை, 'சஸ்பெண்ட்' செய்து, கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார்.