உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக் திருடிய 2 பேர் கைதுமேலும் 5 வாகனங்கள் மீட்பு

பைக் திருடிய 2 பேர் கைதுமேலும் 5 வாகனங்கள் மீட்பு

சேலம்,: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் கேசவன், 32. இவர் கடந்த, 3ல், உடல் நலம் பாதிக்கப்பட்ட மாமாவை சேர்க்க, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அப்போது அவரது ஸ்பிளண்டர் பைக்கை, மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரத்துக்கு பின் திரும்பி வந்தபோது பைக்கை காணவில்லை. அவர், மருத்துவமனை போலீசாரிடம் புகார் அளித்தார்.போலீசார், 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தபோது, பைக்கை திருடியது, அன்னதானப்பட்டி, மூலப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து, 43, ஓமலுார், சந்தைப்பேட்டை சீனிவாசன், 45, என தெரிந்தது. இருவரையும் கைது செய்து, போலீசார் விசாரித்ததில், அன்னதானப்பட்டியில், 3 ஸ்பிளண்டர் பைக், 2 டி.வி.எஸ்., எக்ஸல் சூப்பர் மொபட் வாகனங்களை திருடியதும் தெரிந்தது. அந்த, 5 வாகனங்களையும் போலீசார் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை