ஏற்காட்டில் 48வது மலர் கண்காட்சி ஆரம்ப பணி
ஏற்காட்டில் 48வது மலர் கண்காட்சி ஆரம்ப பணிஏற்காடு:சேலம் மாவட்டம் ஏற்காட்டில், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி, 48வது மலர் கண்காட்சயை நடத்த, தோட்டக்கலைத்துறையினர் முதல் கட்ட பணியை, சில நாட்களுக்கு முன் தொடங்கினர். குறிப்பாக அண்ணா, தாவரவியல் பூங்காக்கள், ரோஸ் கார்டன் உள்ளிட்ட இடங்களில், 40 வகை மலர்களில் 2 லட்சம் செடிகளின் விதைகளை, மலர் படுகைகளில் நடும் பணியை தொடங்கினர்.குறிப்பாக பால்சம், ஜினியா, சால்வியா, ஜெரேனியம், பேன்சி, பெட்டுனியா, மேரி கோல்ட், ஆஸ்டர், கைலார்டியா உள்ளிட்ட செடிகள் தயார் செய்யப்படுகின்றன. முக்கியமாக, 'ஏற்காடு ரோஜா' என அழைக்கப்படும், 'டேலியா', 4,000 செடிகள், தொட்டி, மலர் படுகைகளில் நடவு செய்யப்பட்டன. தொடர்ந்து நடவு செய்யப்பட்ட விதைகள், செடிகளாக வளர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் பூக்க தொடங்கும்படி, தயார்படுத்தும் பணியில் தோட்டக்கலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.