உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இடிக்கப்படாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்கு காத்திருக்கு ஆபத்து

இடிக்கப்படாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்கு காத்திருக்கு ஆபத்து

மகுடஞ்சாவடி: இடிந்து விழும் நிலையில் உள்ள, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் ஆபத்து காத்திருக்கி-றது.மகுடஞ்சாவடி ஒன்றியம், கண்டர்குலமா-ணிக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அரியாம்பா-ளையம் பகுதியில், 100 க்கும் மேற்பட்ட குடும்-பத்தினர் உள்ளனர். இப்பகுதியில், 1996ல் ஊராட்சி நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்-டப்பட்டது. அதன் உறுதி தன்மை குறைந்ததால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பராமரித்து பயன்படுத்தினர்.ஆனால் மீண்டும் ஆங்காங்கே சிமென்ட் தளங்கள் பெயர்ந்த நிலையிலும், தொட்டியின் நான்கு துாண்களும் ஆங்காங்கே விரிசலுடன் காட்சியளிக்கிறது. இதன் அருகே, 10 அடி துாரத்தில் டிரான்ஸ்பார்மர், 30 அடி துாரத்தில் அங்கன்வாடி பள்ளி, 100 அடி துாரத்தில் மாரி-யம்மன் கோவில் உள்ளன.மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அவ்வாறு விழுந்தால் பள்ளி குழந்தைகள், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து, கண்டர்குலமாணிக்கம் ஊராட்சி தலைவி பிரியா கூறியதாவது:மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்படுத்த முடியாததால், கடந்த ஆண்டு அங்கன்வாடி பள்ளி அருகே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்-தேக்க தொட்டி கட்டி பயன்பாட்டுக்கு வந்துள்-ளது. பழைய நீர்த்தேக்க தொட்டியை அகற்ற இரண்டு முறை. பி.டி.ஓ.,விடம் கடிதம் கொடுக்-கப்பட்டுள்ளது. ஆனால் அவர், கலெக்டரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்கிறார்.மேல்நிலை தொட்டி அருகில் மின்கம்பங்கள், சாலை, அங்கன்வாடி மையம், கோவில் உள்-ளன. தற்போது மழை காலம் என்பதால், எப்-போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்து உள்ளது. எனவே உடனடியாக இடித்து அகற்ற அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.இது குறித்து, மகுடஞ்சாவடி பி.டி.ஓ.,செந்தில்-முருகன் (கி.ஊ) கூறுகையில், '' முறைப்படி அனுமதி வாங்கி, 10 நாட்களில் மேல்நிலை தொட்டி இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்-படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ